இனியா நடித்துள்ள 'காஃபி' படத்தின் அப்டேட்..!


இனியா நடித்துள்ள காஃபி படத்தின் அப்டேட்..!
x

நடிகை இனியா நடித்துள்ள 'காஃபி' திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை இனியா நடித்துள்ள திரைப்படம் 'காஃபி'. இந்த படத்தில் ராகுல் தேவ் மற்றும் முகதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் பிரசன்னா பாலா இசையமைத்துள்ளார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஊழல் மற்றும் மனித கடத்தலுக்கு மத்தியில் காணாமல் போன தனது சகோதரனைக் கண்டுபிடிக்க துடிக்கும் ஒரு சகோதரியின் தேடலை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது. அதன்படி 'காஃபி' திரைப்படத்தை கலர்ஸ் தமிழ் வருகிற நவம்பர் 27-ம் தேதி மதியம் 2 மணிக்கு நேரடி சாட்டிலைட் ப்ரீமியராக ஒளிபரப்பவிருக்கிறது.

1 More update

Next Story