சினிமாவில் இருந்து விலகினாரா அதிதி ஷங்கர்...? புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

Image Credits : Instagram.com/aditishankarofficial
நடிகை அதிதி ஷங்கர் டாக்டர் உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி, நடிகர் கார்த்தி ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். நடிப்பு மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் 'மதுர வீரன்' மற்றும் மாவீரன் படத்தில் 'வண்ணாரப்பேட்டை' பாடல்களையும் பாடி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
டாக்டர் படிப்பை முடித்துள்ள அதிதி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாக்டர் உடை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில் 'டாக்டர் A' எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ரசிகர்கள் பலர் அதிதி சினிமாவை விட்டுவிட்டு மருத்துவராக மாறிவிட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் ஏதேனும் படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா..? என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
நடிகை அதிதி ஷங்கரின் இன்ஸ்டாகிராம் பதிவு:






