மீண்டும் தள்ளிபோகிறதா பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 ஏ.டி பட ரிலீஸ்?


மீண்டும் தள்ளிபோகிறதா பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 ஏ.டி பட ரிலீஸ்?
x
தினத்தந்தி 15 April 2024 1:19 PM IST (Updated: 15 April 2024 1:28 PM IST)
t-max-icont-min-icon

பிரபாசின் 'சலார்' படமும் கிட்டத்தட்ட 4 மாதங்கள் தாமதமாகவே வெளியானது.

சென்னை,

நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், 'கல்கி 2989 ஏ.டி.'படத்தை அடுத்த மாதம் 9-ம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு திட்டமிட்டிருந்தது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவு ஜூன் 4-ந்தேதி வெளியாக இருப்பதால், படத்தின் ரிலீசை தள்ளி வைத்தது. இந்நிலையில், மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

படத்தில் வி.எப்.எக்ஸ் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதம் 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரபாசின் 'சலார்' படமும் கிட்டத்தட்ட 4 மாதங்கள் தாமதமாகவே வெளியானது. இப்போது அவரது புதிய படமும் ரிலீசாக காலதாமதமாகும் என்று கூறப்படுகிறது. 'கல்கி 2898 ஏ.டி.' படத்தை முடித்த கையோடு 'சலார்-2' படத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கிறார்.

1 More update

Next Story