காதல் இருக்கிறதா, இல்லையா? - விஜய் தேவரகொண்டா


காதல் இருக்கிறதா, இல்லையா? - விஜய் தேவரகொண்டா
x

தெலுங்கு சினிமாவின் முன்னணி பிரபலங்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இருவரும் எந்த கருத்தும் கூறாமல் ‘கப்சிப்’ என இருக்கிறார்கள். இதனால் இருவரிடையே காதல் இருக்கிறதா, இல்லையா? என்பதே புரியாத புதிராக இருக்கிறது.

விஜய் தேவரகொண்டாவிடம், அவரது காதல் 'கிசுகிசு' பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ''பிரபலமாக இருப்பதும் சில நேரங்களில் அசவுகரியத்தை ஏற்படுத்தும். எந்த அளவு மக்கள் நம்மை விரும்புகிறார்களோ, அதே அளவு நமது சொந்த வாழ்க்கை பற்றியும் அறிய ஆர்வம் காட்டுவார்கள். அந்தவகையில் என்னை பற்றியும் அறிய ஆர்வப்படுகிறார்கள். இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒருவரை பற்றி செய்திகள் வராமல் இருப்பதற்கு பதில், 'கிசுகிசு'வாக எதோ ஒரு தகவல் பேசப்படுவது நல்லது தானே'', என்றார்.

விஜய் தேவரகொண்டா வித்தியாசமான ஆள் தான்.

1 More update

Next Story