இந்தியாவில் சாதி பாகுபாடு இல்லையா? - இயக்குனர் பிரவீன்காந்திக்கு வெற்றிமாறன் பதிலடி


இந்தியாவில் சாதி பாகுபாடு இல்லையா? - இயக்குனர் பிரவீன்காந்திக்கு வெற்றிமாறன் பதிலடி
x

இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது, அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக நம் கண்முன்னே இருக்கிறது என்று வெற்றிமாறன் கூறினார்.

நடிகர் ரஞ்சித், 'குழந்தை கேர் ஆப் கவுண்டம்பாளையம்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பிரவீன் காந்தி, பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரவீன் காந்தி, பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் வளர்ச்சியால் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது. சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவர்களை ஒதுக்க வேண்டும் என்று பேசினார்.

இந்நிலையில், இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியாகியுள்ள 'உயிர் தமிழுக்கு' திரைப்படம் நெல்லை பாளையங்கோட்டையில் இன்று திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக இயக்குநர் வெற்றிமாறன் அங்கு சென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறன், "இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு சமூக பாகுபாடு இல்லை என்று சொல்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது. அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக நம் கண்முன்னே இருக்கிறது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

1 More update

Next Story