ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்' படத்தின் புதிய அப்டேட்


ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தின் புதிய அப்டேட்
x

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்' திரைப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சென்னை,

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்த்துள்ள திரைப்படம் 'ருத்ரன்'. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'ருத்ரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'ருத்ரன்' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story