'தங்கலான்': 'முக்கிய வில்லன் அல்ல...'- டேனியல் கால்டாகிரோன்
நடிகர் டேனியல் கால்டாகிரோன் தங்கலான் படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார்
சென்னை,
பா.ரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' படத்தில் விக்ரம் நடித்து முடித்துள்ளார். சுதந்திர போராட்ட கால கட்டத்தில் கோலார் தங்க வயல் பகுதியில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து 3-டி தொழில்நுட்பத்தில் இந்த படம் தயாராகிறது.
மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடிக்கின்றனர். மேலும், இங்கிலாந்தை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
டேனியல் கால்டாகிரோன் 'தி பீச்', 'தி பியானிஸ்ட்' தி கிரேடில் ஆப் லைப் உள்பட 16 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 'தி பியானிஸ்ட்' படம் ஆஸ்கார் விருது பெற்றது. டேனியல் கால்டாகிரோன் தங்கலான் படத்தில் இணைந்துள்ளதன் மூலம் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் நடிகர் டேனியல் கால்டாகிரோன், தங்கலான் படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'ரஞ்சித்தும் நானும் நீண்ட நேரம் பேசினோம். அவரிடம், எனக்கு பாலிவுட் பற்றி கொஞ்சம் தெரியும், ஆனால் டோலிவுட், கோலிவுட் பற்றி தெரியாது. நீங்கள் ஆங்கிலேயர்களை எப்படி சித்தரிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், அது பரவாயில்லை என்றேன். பின்னர் ரஞ்சித், இந்திய சினிமாவில் வித்தியாசமாக ஏதாவது செய்த முதல் பிரிட்டிஷ் நடிகர்களில் ஒருவராக நான் இருக்க வேண்டும் என்றும் நானும் விக்ரமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் கூறினார்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, படம் எடுக்க இவ்வளவு நேரம் ஆனது. நான் அக்டோபர் 2022 இன் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்தேன், நவம்பர் 2023 இல் முடித்தேன், எனது கதாபாத்திரம் இந்தியத் திரைப்படத்தில் இருப்பது போன்ற ஒரு முக்கிய வில்லன் அல்ல, என்றார்.
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் "தங்கலான்" வரும்15 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.