இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் பரிசளித்த ஜாக்கி ஷெராப்


இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் பரிசளித்த ஜாக்கி ஷெராப்
x

இயக்குனர் நெல்சனுக்கு நடிகர் ஜாக்கி ஷெராஃப் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

ஜெயிலர் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் நிறைவு பெறவுள்ளதாகவும் இதில் கலகலப்பான ரஜினியை எதிர்பார்க்கலாம் எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இயக்குனர் நெல்சனுக்கு நடிகர் ஜாக்கி ஷெராஃப் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது, 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த புகைப்படத்தை நெல்சன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

1 More update

Next Story