ஜெயம் ரவி வெளியிட்ட ஜீவா பட பாடல்..!


ஜெயம் ரவி வெளியிட்ட ஜீவா பட பாடல்..!
x

நடிகர் ஜீவா நடித்துள்ள படத்தின் பாடலை ஜெயம் ரவி இன்று வெளியிட்டார்.

சென்னை,

இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் 'வரலாறு முக்கியம்'. இந்த படத்தில் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரக்யா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ள இப்படத்திற்கு 'ஜிமிக்கி கம்மல்' பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இந்த படத்தின் மூன்றாவது பாடலான 'வேல கெடச்சிருச்சு' என்ற பாடலை நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய சமூகவலைதளத்தில் இன்று வெளியிட்டார். சந்தோஷ் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை வினித் ஶ்ரீனிவாசன் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Next Story