ஜீவாவின் 'பிளாக்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
ஜீவா நடித்துள்ள 'பிளாக்' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவர் தற்போது 'மாநகரம், டாணாக்காரன்' போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு 'பிளாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், 'பிளாக்' படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கை குழு வழங்கி உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் 'என் செல்ல கேடி' பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.