ஜீவா நடித்துள்ள 'வரலாறு முக்கியம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
நடிகர் ஜீவா நடித்துள்ள 'வரலாறு முக்கியம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'வரலாறு முக்கியம்'. நடிகை காஷ்மீரா பர்தேஷி மற்றும் பிரக்யா நாகரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில், வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிகுமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு 'ஜிமிக்கி கம்மல்' பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைத்துள்ளார். சென்னை, கோயம்புத்தூர், ஐதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'வரலாறு முக்கியம்' திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.