'காஜல் 60' படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு


காஜல் 60 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு
x

நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் 'காஜல் 60' படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழில் 'பழனி' படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் காஜல் அகர்வால். அவர் தமிழில் மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் 2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு காஜல் அகர்வால் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் 'கோஸ்டி' திரைப்படம் வெளியானது. தற்போது அவர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்து வரும் 'காஜல் 60' திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'காஜல் 60' திரைப்படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை (ஜூன் 18) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story