நடிப்புக்கு தற்காலிக ஓய்வு கொடுத்த காஜல் அகர்வால்


நடிப்புக்கு தற்காலிக ஓய்வு கொடுத்த காஜல் அகர்வால்
x
தினத்தந்தி 1 July 2022 8:50 AM GMT (Updated: 2022-07-01T14:34:08+05:30)

காஜல் அகர்வால் தனது சினிமா பயணத்துக்கு தற்காலிக ஓய்வு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த போதே, தொழில் அதிபர் கவுதம் கிச்சலு என்பவரை காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்கு பிறகு தனது அழகு குறையாத புகைப்படங்களை அவர் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார். இதனால் அவர் மீண்டும் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால் காஜல் அகர்வால் தனது சினிமா பயணத்துக்கு தற்காலிக ஓய்வு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குழந்தையை உடனிருந்து கவனிக்கும் விதமாக சிறிது காலம் சினிமாவுக்கு ஓய்வு கொடுக்க உள்ளதாகவும், இதனாலேயே படவாய்ப்புகளை நிராகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் காஜல் அகர்வால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் தாய்மைக்கு மதிப்பளித்து அவர் எடுத்திருக்கும் இந்த முடிவை வரவேற்பதாக சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.


Next Story