காபியில் குளித்த காஜல் அகர்வால்...வைரலாகும் வீடியோ


காபியில் குளித்த காஜல் அகர்வால்...வைரலாகும் வீடியோ
x

காஜல் அகர்வால் காபியில் குளிப்பது போன்ற வீடியோக்காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கௌதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு"நீல்" எனவும் பெயரிட்டு இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் படங்களில் பிஸியாக இருக்கும் காஜல் அகர்வால் அவரின் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், காபியில் குளிப்பது போன்ற வீடியோக்காட்சியொன்றை பகிர்ந்துள்ளார். இதில் பார்க்கும் அவர் உண்மையாக காஃபியில் குதிப்பது போன்று இருக்கின்றது.

வீடியோக்காட்சியை பார்த்த சமூக தளவாசிகள், "என்ன ஆனாலும் காஜலின் குறும்புத்தனம் இன்னும் போகவில்லை.." என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

1 More update

Next Story