பிரமாண்டமாக தயாராகும் கல்கி திரைப்படம்... புதிய வகை துப்பாக்கியை வடிவமைத்த படக்குழு..!


பிரமாண்டமாக தயாராகும் கல்கி  திரைப்படம்... புதிய வகை துப்பாக்கியை வடிவமைத்த படக்குழு..!
x
தினத்தந்தி 31 Dec 2023 9:18 AM GMT (Updated: 31 Dec 2023 11:11 AM GMT)

சமீபத்தில் கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'சலார்' திரைப்படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பான் இந்தியா அளவில் பெரிய நடிகராக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன.

சமீபத்தில் கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'சலார்' திரைப்படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார். இந்த படம் மோசமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்திற்காக புதிய வகை துப்பாக்கியை படக்குழு வடிவமைத்துள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள வடிவில் துப்பாக்கி வடிவமைப்பு மற்றும் அதன் தயாரிப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Next Story