கேன்ஸ் பட விழாவில் கமல், ஏ.ஆர்.ரகுமான்


கேன்ஸ் பட விழாவில் கமல், ஏ.ஆர்.ரகுமான்
x

கேன்ஸ் பட விழாவில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.

உலகப் புகழ் பெற்ற 75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் தொடங்கி உள்ளது. இதில் இந்திய நடிகர்-நடிகைகள், மத்திய மந்திரி அனுராக் தாகூர் தலைமையில் பங்கேற்றனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், நவாசுதீன் சித்திக், இயக்குனர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கேன்ஸ் பட விழாவில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன. இந்தி நடிகை தீபிகா படுகோனே கேன்ஸ் படவிழா நடுவராக பங்கேற்று உள்ளார்.

கேன்ஸ் படவிழாவில் மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்டரி மற்றும் பார்த்திபன் உலக சாதனைக்காக ஒரே ஷாட்டில் படமாக்கிய இரவின் நிழல் படங்கள் திரையிடப்படுகின்றன. தம்பு என்ற மலையாள படம் மற்றும் சில இந்தி படங்களையும் திரையிடுகிறார்கள். கமல்ஹாசனின் விக்ரம் பட டிரெய்லரும் வெளியானது. மொத்தம் 600-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.


Next Story