தக் லைப்: மீண்டும் இணைந்த துல்கர் சல்மான்; இரட்டை வேடத்தில் சிம்பு?


தக் லைப்: மீண்டும் இணைந்த துல்கர் சல்மான்; இரட்டை வேடத்தில் சிம்பு?
x

‘தக் லைப்' படத்தில் துல்கர் சல்மான் மீண்டும் இணைந்துள்ளதாகவும், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. 'தக் லைப்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், த்ரிஷா நடித்த கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே துல்கர் சல்மான் தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதால், அதிக நாள்கள் தக் லைப் படத்துக்கு தர முடியாத காரணத்தால் விலகியதாக தகவல்கள் வெளியாகின. துல்கர் சல்மானுக்கு பதிலாக நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், துல்கர் சல்மான் 'தக் லைப்' படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சிம்பு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தில்லியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 20-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story