கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தை இணையத்தில் வெளியிட தடை : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
விக்ரம்' படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
சென்னை,
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் டிரைலர் ,மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . 'விக்ரம்' திரைப்படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்கக்கோரி பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது.
அதில் 'விக்ரம்' படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது