பிரபல நடிகர் ஒருவர் தன்னை உளவு பார்ப்பதாக நடிகை கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு


பிரபல நடிகர் ஒருவர் தன்னை உளவு பார்ப்பதாக நடிகை கங்கனா ரனாவத்  குற்றச்சாட்டு
x

தன்னை திரையுலகைச் சேர்ந்த பிரபல பாலிவுட் ஜோடி உளவு பார்ப்பதாக நடிகை கங்கனா ரனாவத்

மும்பை

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், திரையுலகைச் சேர்ந்த பிரபல பாலிவுட் ஜோடி தன்னை உளவு பார்க்கிறார்கள் என்று கூறி உள்ளார்.

தெருக்களில் மட்டுமின்றி, தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலும், பார்க்கிங் பகுதியிலும் தன்னை உளவு பார்க்கும் அளவுக்கு விஷயங்கள் முன்னேறிவிட்டதாக நடிகை வெளிப்படுத்தினார்.

ஞாயிற்றுக்கிழமை, கங்கனா ரனாவத் இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.

இது தொடரபாக் அவர் கூறி இருப்பதாவது;-

நடிகரின் மனைவிக்கு தனது கணவர் என்ன செய்கிறார் என்பது நன்றாகத் தெரியும், ஆனால் அதை நிறுத்துவதற்குப் பதிலாக, அவர் அவரை ஊக்குவித்து வருகிறார். நட்சத்திரங்களை குறிவைத்தால் மட்டுமே அவர்களுக்கு புகழ் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

நான் செல்லும் எல்லா இடங்களிலும் என்னைப் பின்தொடர்ந்து உளவு பார்க்கிறார்கள், தெருக்களில் மட்டுமல்ல, எனது கட்டிடம் பார்க்கிங் மற்றும் வீட்டு மொட்டை மாடியில் கூட அவர்கள் என்னைப் பிடிக்க ஜூம் லென்ஸ்கள் வைத்து உள்ளனர்.

தனிப்பட்ட தகவல்களுடன் கூட எனது வாட்ஸ்அப் தரவுகள் திருடப்படுவதாக நான் உறுதியாக நம்புகிறேன் என கூறி உள்ளார்.

அவர் எந்த பெயரையும் குறிப்பிடவில்லை ஆனால் கங்கனா ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் பற்றி பேசுகிறார் என்று ரெடிட் பயனர்கள் நம்பினர்.

இந்த் நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் கங்கனா ரனாவத் "என்னைப் பற்றி கவலைப்படுபவர்கள், நேற்றிரவு முதல் என்னைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள், கேமராக்கள் அல்லது கேமராக்கள் இல்லாமல் யாரும் என்னைப் பின்தொடரவில்லை. வார்த்தைகளை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, விஷயங்களைப் புரிய வைக்க வேறு வழி தேவை.

உங்கள் வழியை சீர்செய்யுமாறு நான் எச்சரிக்கிறேன், இல்லையெனில் நான் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்களைத் தாக்குவேன், என்னை பைத்தியம் என்று அழைப்பவர்களுக்கு கூட, நான் எந்த அளவிற்கு செல்ல முடியும் என்று தெரியவில்லை என்று தனது குறிப்பில் ஒரு வாள் ஈமோஜியைச் வைத்துள்ளார்.


Next Story