'அத்துமீறுபவர்கள் சுடப்படுவீர்கள்' - கங்கனா எச்சரிக்கை


அத்துமீறுபவர்கள் சுடப்படுவீர்கள் - கங்கனா எச்சரிக்கை
x

வீட்டின் வெளியே கங்கனா வைத்துள்ள அறிவிப்பு பலகை பேசு பொருளாகியுள்ளது.

மும்பை,

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற திரைப்படம் 'சந்திரமுகி'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் கங்கனா ரனாவத் நாயகியாகவும் நடிக்கின்றனர். பி.வாசு இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் சந்திரமுகி 2-ம் பாகத்தில் தனது காட்சிகளில் நடித்து முடித்து விட்டதாக கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இவரின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கேக் வெட்டி படக்குழுவினர் வழியனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது கங்கனா மும்பையில் உள்ள தனது வீட்டை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் வீட்டின் வெளியே கங்கனா வைத்துள்ள அறிவிப்பு பலகை இடம்பெற்றிருந்தது. அதில் எழுதப்பட்டுள்ள வாசகம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

அந்த அறிவிப்பு பலகையில், "அத்துமீறல் இல்லை. மீறுபவர்கள் சுடப்படுவீர்கள். உயிர் பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்" என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் பிறரை மிரட்டும் வகையில் இவ்வாறு அறிவிப்பு பலகை வைப்பது சரிதானா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

1 More update

Next Story