'தேவரா'வுடன் 'காந்தாரா' - புகைப்படங்கள் வைரல்


kantara  with Devara - photos go viral
x

'தேவரா' நடிகருடன், 'காந்தாரா' நடிகர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு,

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ரிஷப் ஷெட்டி சமீபத்தில் உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை கோவிலுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சென்றுள்ளனர். இயக்குனர் பிரசாந்த் நீலும் இவர்களுடன் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களை ரிஷப் ஷெட்டி தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர் தற்போது தேவரா படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கும் இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் 2 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. வரும் 27-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளநிலையில், 3-வது பாடலும் விரைவில் வெளியாகும் என்று அனிருத் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், நடிகர் ரிஷப் ஷெட்டி தற்போது காந்தாரா படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், காந்தாராவின் அறிமுகமாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். பான் இந்தியா படமாக உருவாகும் 'காந்தாரா எ லெஜெண்ட் சாப்டர் 1' அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், 'தேவரா' நடிகருடன், 'காந்தாரா' நடிகர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story