மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்..!


மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்..!
x

2022ம் ஆண்டு மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

புதுடெல்லி,

2022ம் ஆண்டு மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இயக்குநர் கபீர் கான் இயக்கிய '83' படத்தை கொண்டாடும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் பயணத்தை, 1983ல் இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை வென்ற சம்பவங்களை இப்படம் விவரிக்கிறது.

இது குறித்து கபில் தேவ் கூறியதாவது, "2022 2022ம் ஆண்டு மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்திய சினிமாவில் சிறந்ததைக் கொண்டாட இது ஒரு சிறந்த தளம்.

விளையாட்டும் சினிமாவும் இந்தியர்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு நம்மை இணைக்கும் இரண்டு முக்கிய கலாச்சார அனுபவங்கள் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்" என்று கூறினார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், இந்த திரைப்பட திருவிழா காணொலி வாயிலாக மட்டுமே நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 12ந்தேதி தொடங்கி 20ந்தேதி வரை காணொலி வாயிலாகவும் நேரடியாகவும் என இரு நடைமுறையிலும் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் விழாவில் இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் இருந்து 100 க்கும் மேற்பட்ட படங்கள் தேர்வாகி உள்ளன. மேலும் இந்திய சினிமாவை அதன் பெருமை மற்றும் பன்முகத்தன்மையுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று நிகழ்ச்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story