கார்த்தியின் 'விருமன்' படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ்..!


கார்த்தியின் விருமன் படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ்..!
x

விருமன் படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

சென்னை,

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் விருமன் திரைப்படம் தென்தமிழகத்தைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது.

அதிதி சங்கர் இந்த திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார மதுரைப் பெண்ணாக நடித்துள்ளார். விருமன் திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து தங்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில் விருமன் படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகிறது.

1 More update

Next Story