கிஷன் தாஸ் நடிக்கும் 'தருணம்' படத்தின் புதிய பாடல் வெளியானது


கிஷன் தாஸ் நடிக்கும் தருணம் படத்தின் புதிய பாடல் வெளியானது
x

இந்த படத்தில் கிஷன் தாசுக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார்.

சென்னை,

'தேஜாவு' படத்தின் இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இந்த படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள் இ சித்தார்த் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'எனை நீங்காதே நீ' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடலை கபில் கபிலன், பவித்ரா சாரி பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story