ஐ.ஐ.எப்.ஏ திரைப்பட விருதுகள் : சிறந்த நடிகர் விக்கி கவுசல் - சிறந்த திரைப்படமாக ஷெர்ஷா தேர்வு


ஐ.ஐ.எப்.ஏ திரைப்பட விருதுகள் : சிறந்த நடிகர் விக்கி கவுசல் - சிறந்த திரைப்படமாக ஷெர்ஷா தேர்வு
x

Image Courtesy : Twitter @IIFA

கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ஷெர்ஷா சிறந்த படத்திற்கான விருதை தட்டிச்சென்றது

அபுதாபி,

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது (ஐ.ஐ.எப்.ஏ) வழங்கும் விழா அபுதாபியில் நடந்துவருகிறது. இந்தி`படங்களுக்கான விருதுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.

இந்த விழாவில் சல்மான் கான், விக்கி கவுஷல், ஷாஹித் கபூர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், கிருதி சனோன், அனன்யா பாண்டே, ஏ.ஆர்.ரஹ்மான், சாரா அலிகான், டைகர் ஷெராப், யோ யோ ஹனி சிங், நோரா ஃபதேஹி, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ஷெர்ஷா சிறந்த படத்திற்கான விருதை தட்டிச்சென்றது. சர்தார் உதம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது விக்கி கவுசல்-க்கு வழங்கப்பட்டது. இந்திய சுதந்திர போராட்ட வீரர் உதம் சிங்-கின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் உதம் சிங் கதாபாத்திரத்தில் விக்கி கவுசல் நடித்திருந்தார். விஷ்ணு வரதன் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார். மிமியில் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக க்ரிதி சனோன் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

இந்த விழாவில் விருது வென்றவர்களின் (இந்தி திரைப்படங்களுக்காக ) விவரம் பின்வருமாறு :

துணைப் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பு (பெண்): சாய் தம்ஹங்கர் (மிமி)

துணைப் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பு (ஆண்): பங்கஜ் திரிபாதி (லுடோ)

இசை இயக்கம் (டை): ஏ.ஆர். ரஹ்மான் (அத்ராங்கி ரே), தனிஷ்க் பாக்சி, ஜஸ்லீன் ராயல், ஜாவேத்-மோசின், விக்ரம் மாண்ட்ரோஸ், பி ப்ராக், ஜானி (ஷேர்ஷா)

பின்னணிப் பாடகி (பெண்): ராதன் லம்பியான் (ஷெர்ஷா) -அசீஸ் கவுர்

பின்னணிப் பாடகர் (ஆண்): ராதன் லம்பியான் (ஷெர்ஷா) - ஜூபின் நௌடியல்

சிறந்த கதை (அசல்): அனுராக் பாசு (லுடோ)

சிறந்த கதை (தழுவல்): கபீர் கான், சஞ்சய் பூரன் சிங் சவுகான் (83)

பாடல் வரிகள்: லெஹ்ரா டோவுக்காக கௌசர் முனீர் (83)

சிறந்த அறிமுக நடிகை : ஷர்வரி வாக் (பண்டி அவுர் பாப்லி 2)

சிறந்த அறிமுக நடிகர் : அஹான் ஷெட்டி (தடாப் 2)


Next Story