என்னம்மா நீ டிரஸ் போடுற...! பொது இடத்தில் ஆபாசம் உர்பி ஜாவேத் மீது போலீசில் புகார்


என்னம்மா நீ டிரஸ் போடுற...! பொது இடத்தில் ஆபாசம் உர்பி ஜாவேத் மீது போலீசில் புகார்
x

பொது இடங்களிலும் சமூக ஊடகங்களிலும் சட்டவிரோதமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாக நடிகை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

மும்பை

'பிக் பாஸ் புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக பிரபலமானவர். அவருடைய தனித்துவமான ஆடைகள் பெரும்பாலும் ஆச்சரியப்படவைக்கும். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள் அல்லது பூ இதழ்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து தனது உடலை மறைத்து புகைப்படங்களாக வெளியிடுவார்.

இந்த நிலையில் பொது இடங்களிலும் சமூக ஊடகங்களிலும் சட்டவிரோதமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகசமூக ஊடக செல்வாக்கு மிக்க உர்பி ஜாவேத் மீது எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இந்த புகாரை வழக்கறிஞர் அலி காஷிப் கான் தேஷ்முக் வெள்ளிக்கிழமை அந்தேரி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளார்.

1 More update

Next Story