'லவ்வர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு


லவ்வர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

லவ்வர் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சென்னை,

நடிகர் மணிகண்டன், ஸ்ரீகௌரி ப்ரியா, கண்ணா ரவி நடித்து வெளியான திரைப்படம் 'லவ்வர்'.இத்திரைப்படத்தை இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். இவரின் முதல் படம் இதுவே. இவர் இதற்கு முன்பு 'லிவ் இன்"என்ற வெப் சீரீஸை யூ ட்யூபில் இயக்கியுள்ளார்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள 'லவ்வர்' படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்

'லவ்வர்'திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்,இந்த திரைப்படம் வரும் 8-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Next Story