'துணிவு' படத்தின் உரிமையை கைப்பற்றிய லைக்கா நிறுவனம்


துணிவு படத்தின் உரிமையை கைப்பற்றிய லைக்கா நிறுவனம்
x

வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

சென்னை,

நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61-வது படத்திற்கு 'துணிவு' என தலைப்பிட்டுள்ளது படக்குழு. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். . ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது.

இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்து வருகிறார்.. பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் 'துணிவு' படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது.இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.தமிழகத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் பெற்றுள்ளது.


Next Story