75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட்- தேசிய சினிமா தினம் வேறு தேதிக்கு மாற்றம்


75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட்- தேசிய சினிமா தினம் வேறு தேதிக்கு மாற்றம்
x

Image Courtesy: AFP

4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 75 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை,

மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு செப்டம்பர் 16ஆம் தேதியை தேசிய சினிமா தினம் என அறிவித்திருந்தது. அந்த நாளில் சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 75 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படும் என கூறியிருந்தனர்.

அவர்களின் இந்த அறிவிப்பை ரசிகர்கள் பலரும் வரவேற்றனர். இந்த நிலையில் தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16ஆம் தேதியிலிருந்து, செப்டம்பர் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ரசிகர்களின் பங்கேற்பை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முக்கிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகின்றன. அதேபோல் இந்தியில் ரன்பீர் கபூர் - அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மஸ்திரா திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படங்களில்ன் வசூல் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த முடிவை மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா எடுத்து இருக்கலாம் என்வும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story