நடிகர் விஜய்க்கு மலையாள நடிகர் மோகன்லால் பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். அவருக்கு விதவிதமாக போஸ்டர்களை ஒட்டியும் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய்க்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், மலையாள நடிகர் மோகன்லால் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அன்புள்ள விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அனைத்து மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் பெற வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
மேலும் எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய் அண்ணா" என்று கூறியுள்ளார்.