பிரபல நகைச்சுவை நடிகை உடல்நலக் குறைவால் மரணம்


பிரபல நகைச்சுவை நடிகை உடல்நலக் குறைவால் மரணம்
x
தினத்தந்தி 22 Feb 2023 11:49 AM IST (Updated: 22 Feb 2023 4:59 PM IST)
t-max-icont-min-icon

சுபி சுரேஷ் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில மலையாளப் படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து உள்ளார்.

கொச்சி

பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ் (42) பிப்ரவரி இன்று காலை காலமானார்.

சுபி சுரேஷ் கல்லீரல் பிரச்சனையால் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் நிமோனியா காய்ச்சலால் அவரது உடல்நிலை மோசமடைந்தது இதை தொடர்ந்து அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ரபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார்.

சுபி சுரேஷ் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில மலையாளப் படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து உள்ளார்.

எர்ணாகுளம் மாவட்டம், திரிபுனித்துராவில் பிறந்தார். அப்பா சுரேஷ், அம்மா அம்பிகா, அண்ணன் ஏபி சுரேஷ். தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

சுபி சுரேஷ் சினிமாலா என்ற நகைச்சுவைத் தொடரின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பல நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். வெளி நாடுகளிலும் பல மேடை நிகழ்ச்சிகளில் நகைச்சுவை வேடங்களில் நிகழ்த்தப்பட்டுள்ளன. சூர்யா டிவியில் குழந்தைகளுக்கான குட்டிப்பட்டாளம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சுபி.

2006ஆம் ஆண்டு ராஜசேனன் இயக்கிய கனக சிம்ஹாசனம் படத்தின் மூலம் சுபி சுரேஷ் திரையுலகில் நுழைந்தார். எல்சம்மா என்ற ஆண்குட்டி, பஞ்சவர்ண தத்தை, டிராமா.. உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1 More update

Next Story