மலையாள காமெடி நடிகர் கொச்சு பிரேமன் உடல்நல குறைவால் காலமானார்


மலையாள காமெடி நடிகர் கொச்சு பிரேமன் உடல்நல குறைவால் காலமானார்
x

மலையாள காமெடி நடிகர் கொச்சு பிரேமன் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.



திருவனந்தபுரம்,


கேரளாவில் நாடக கலைஞராக இருந்து பின்னர் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் கே.எஸ். பிரேம் குமார் என்ற கொச்சு பிரேமன். இவர், நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

தொலைக்காட்சிகளில் பல மலையாள தொடர்களிலும் நடித்து உள்ளார். இவரது முதல் படம் தில்லிவாலா ராஜகுமாரன். 1996-ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் நடிகர் ஜெயராம், நடிகை மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏறக்குறைய 250 படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில், சுவாச கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 68. அவரது மறைவுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று பிரேமன் மறைவுக்கு, நடிகர்கள் பிருத்விராஜ், அஜூ வர்கீஸ், மனோஜ் கே. ஜெயன் மற்றும் நாதீர்ஷா உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story