மலையாளம் பிட்டு படம் என்ற கெட்ட பெயரை மாற்றியவர்கள் மம்முட்டி- மோகன்லால்- பிரியதர்ஷன் பெருமிதம்


மலையாளம் பிட்டு படம் என்ற கெட்ட பெயரை மாற்றியவர்கள் மம்முட்டி- மோகன்லால்- பிரியதர்ஷன் பெருமிதம்
x

'ஒரு காலத்தில் மலையாள சினிமாவுக்கு பிட்டு படம் என்ற கெட்ட பெயர் இருந்ததை, மம்முட்டியும், மோகன்லாலும் மாற்றிவிட்டார்கள் என டைரக்டர் பிரியதர்ஷன் கூறினார்

திருவனந்தபுரம்

ஷேன் நிகம், ஷைன் டாம் சாக்கோ நடிப்பில் பிரியதர்ஷன் கதையில் உருவாகியுள்ள படம் 'கொரோனா பேப்பர்ஸ்'

இந்த் படத்தின் சமீபத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரபல மலையாள டைரக்டர் பிரியதர்ஷன் கூறியதாவது:-

மம்முட்டி - மோகன்லால் இருவரும் மலையாள சினிமாவின் இரு தூண்கள். இவர்கள் இல்லாமல் மலையாள சினிமா இன்றைய நிலையை அடைந்திருக்கவே முடியாது. ஏனென்றால் ஒரு காலத்தில் மலையாள சினிமாவுக்கு கேரளாவுக்கு வெளியே கெட்ட பெயர் இருந்தது. ஆபாசப் படங்கள் என்று ஒரு காலம் இருந்தது. அதையெல்லாம் மாற்றி அவர்களை மரியாதைக்குரியவைகளாக மாற்றுவதற்கு இருவருமே முழுப் பொறுப்பு. அதனால், இன்றைய தலைமுறையினர் உட்பட, இருவருமே நமக்கு முன்னோடி என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்.

1 More update

Next Story