நடிகை மஞ்சுவாரியரின் பைக் பயண புகைப்படங்கள்


நடிகை மஞ்சுவாரியரின் பைக் பயண புகைப்படங்கள்
x

நடிகை மஞ்சு வாரியர் வார இறுதியில் தனது நண்பர்களுடன் பைக் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை,

மலையாள நடிகையாக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் மஞ்சு வாரியர். குறிப்பாக, நடிகர் தனுஷ் உடன் இணைந்து 'அசுரன்' படத்தில் நடித்த பின்பு தமிழ்நாட்டில் பிரபலமானார். பின்னர் அஜித் உடன் 'துணிவு' படத்தில் இணைந்து நடித்தார். அதன் பின்னரே நடிகை மஞ்சு வாரியருக்கு பைக் டிராவல்கள் மீது ஈர்ப்பு அதிகமாகியது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான், நடிகர் அஜித்தை போல் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ பைக்கை மஞ்சு வாரியர் வாங்கினார். அதன்பின் அந்த பைக்கில் அஜித்துடன் இணைந்து இந்தியாவில் நிறைய இடங்களுக்கு மஞ்சு வாரியர் பைக் பயணம் சென்று உள்ளார்.

தற்போது மஞ்சு வாரியர் வார இறுதியில் தனது நண்பர்களுடன் இணைந்து பைக் சவாரியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், என்னைப் போன்ற பலருக்கு நடிகர் அஜித் குமார் உத்வேகமாக இருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார் மஞ்சு வாரியர்.

தற்போது மஞ்சு வாரியர், ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் 'விடுதலை 2' படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story