தெலுங்கில் அதிக படங்கள்: நடிகை வரலட்சுமி மகிழ்ச்சி


தெலுங்கில் அதிக படங்கள்:  நடிகை வரலட்சுமி மகிழ்ச்சி
x

தெலுங்கில் எனது நடிப்புக்கு மரியாதை தருகிறார்கள். வரலட்சுமி இருந்தால் படம் வெற்றி பெறும் என்றும் நம்புகிறார்கள் என்று நடிகை வரலட்சுமி கூறினார்,

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். அவரது நடிப்பில் 'கொன்றால் பாவம்' என்ற தமிழ் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து வரலட்சுமி சரத்குமார் அளித்துள்ள பேட்டியில், "தமிழில் 2012-ல் போடா போடி படத்தில் நடித்தேன். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆனால் தெலுங்கில் 2012-ல் கிராக் படத்தில் நடித்த பிறகு ஒரே வருடத்தில் நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தன. இதனால் தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறேன். எனது நடிப்புக்கு அங்கு மரியாதை தருகிறார்கள். சம்பள பேரம் இல்லை. வரலட்சுமி இருந்தால் படம் வெற்றி பெறும் என்றும் நம்புகிறார்கள். இது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது தயாள் பத்மநாபன் இயக்கும் 'கொன்றால் பாவம்' தமிழ் படத்தில் நடித்துள்ளேன். இதில் சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரிராவ் ஆகியோரும் நடிக்கின்றனர். ஒரு வீட்டில் ஒருநாள் நடக்கும் கதை. விறுவிறுப்பாக தயாராகி உள்ளது. சிறந்த படம். இந்த படத்துக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் எனக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வில்லியாக நடிப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. மற்ற நடிகைகள் தயங்கும் வேடங்களில் நான் துணிச்சலாக நடிக்கிறேன்'' என்றார்.


Next Story