'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அட்லி


மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அட்லி
x

பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸின் 101-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை,

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 1985 முதல் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. கடைசியாக தயாரித்த விஜய்யின் மெர்சல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கடுத்து 2023-ல் தயாரித்த வல்லவனுக்கும் வல்லவன் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. 2018-ல் ஆருத்ரா படத்தினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி புதிய பட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஜூலை 12-ம் நாள் இதன் போஸ்டர் வெளியாகுமென அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனரும், தயாரிப்பாளருமான அட்லி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்தப் படத்துக்கு 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாயகனாக யூடியூபர் ஜம்ஸ்கட் புகழ் ஹரி பாஸ்கர் நடிக்கிறார். நாயகியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார். அருண் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

1 More update

Next Story