வழிகாட்டி, நண்பர், பிடித்த நடிகர் எல்லாம் அவர்தான் - 'சீதா ராமம்' பட நடிகை


வழிகாட்டி, நண்பர், பிடித்த நடிகர் எல்லாம் அவர்தான் - சீதா ராமம் பட நடிகை
x
தினத்தந்தி 2 April 2024 4:07 AM GMT (Updated: 2 April 2024 7:12 AM GMT)

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சீதா ராமம்'.

சென்னை,

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் 'சீதா ராமம்'. இப்படம் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ள திரைப்படம் 'பேமிலி ஸ்டார்'. இப்படம் வரும் 5-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்றன. அப்போது நடந்த பேட்டி ஒன்றில் மிருணாள் தாக்கூரிடம் பிடித்த நடிகர் யார் என்று கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது,

துல்கர் சல்மான்தான் எனக்கு பிடித்த நடிகர். நான் சீதா ராமம் படத்தில் நடித்தபோது மிகவும் கடினமாக உணர்ந்தேன். அப்போது அவர் எனக்கு உத்வேகம் அளித்தார். அவர் பல மொழி படங்களில் நடித்துள்ளார். அவர்தான் எனக்கு முன்னுதாரணம். வழிகாட்டி, நண்பர், பிடித்த நடிகர் எல்லாம் அவர்தான். இவ்வாறு கூறினார்.

முன்னதாக, நித்யா மேனனை விட மிருணாள் தாக்கூரை தனக்கு பிடிக்கும் என்று துல்கர் சல்மான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story