இந்தியன் 2 படத்தின் சண்டை காட்சிகளுக்காக களரிப் பயிற்சி செய்யும் காஜல் அகர்வால்!


இந்தியன் 2 படத்தின் சண்டை காட்சிகளுக்காக களரிப் பயிற்சி செய்யும் காஜல் அகர்வால்!
x

'இந்தியன் 2' படப்பிடிப்பில் காஜல் அகர்வால் தனது பகுதிகளுக்காக களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சென்னை,

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' திரைப்படத்தின் பணிகள் தொடங்கின. பின்னர் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இந்தநிலையில், இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் இணைவதோடு அவருடன் காஜல் அகர்வால் பங்கேற்கிறார். படத்தில் இடம்பெறவுள்ள பிளாஷ் பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதோடு மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகிவருகிறது. இந்த படப்பிடிப்பில் காஜல் அகர்வால் தனது பகுதிகளுக்காக களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வரைலாகி வருகிறது.


Next Story