'தளபதி 68' படத்தின் புதிய அப்டேட் கொடுத்த யுவன்,,,!


தளபதி 68 படத்தின் புதிய அப்டேட் கொடுத்த  யுவன்,,,!
x

தளபதி 68 படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகிறது. இதில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தளபதி 68 படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யுவன், இந்தப் படத்தில் முதல் பாடல் ஒரு தர லோக்கல் குத்து பாடலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.


Next Story