நடிகையின் 'டீப் பேக்' புகைப்படங்களை வெளியிட்ட மர்ம நபர்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி


நடிகையின் டீப் பேக் புகைப்படங்களை வெளியிட்ட மர்ம நபர்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி
x

கன்னட சின்னத்திரை நடிகை வைஷ்ணவி கவுடா தொடர்பான ‘டீப் பேக்’ புகைப்படம் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப் ஆகியோரின் முகத்தை பயன்படுத்தி 'டீப் பேக்' வீடியோகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்தநிலையில், கன்னட சின்னத்திரை நடிகை வைஷ்ணவி கவுடா தொடர்பான ஒரு 'டீப் பேக்' புகைப்படம் வெளியாகி உள்ளது.

அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவரது புகைப்படங்களை மர்ம நபர்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். அவற்றைப் பார்த்த நடிகை வைஷ்ணவி கவுடா மற்றும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுபற்றி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது கன்னட சின்னத்திரை நடிகைகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story