'பொன்னியின் செல்வனுடன்' மோதும் 'நானே வருவேன்'


பொன்னியின் செல்வனுடன் மோதும் நானே வருவேன்
x

தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் வரும் 30-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதனிடையே, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்நிலையில், 'நானே வருவேன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 29-ம் தேதி 'நானே வருவேன்' திரைப்படம் திரையரங்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மணிரத்தினத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதற்கு ஒரு நாள் முன்பாக 29-ம் தேதி செல்வராகவனின் ' நானே வருவேன்' திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுகிறது.

இரு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாள்களில் ரிலீஸ் ஆவதால் சினிமா ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.


Next Story