மீண்டும் நடிக்க வரும் நமீதா


மீண்டும் நடிக்க வரும் நமீதா
x

தமிழ் திரையுலகில் 2000-ம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நமீதா கவர்ச்சியான நடிப்பால் அதிக ரசிகர்களை சேர்த்தார். விஜயகாந்த், விஜய், அஜித்குமார், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தார்.

2017-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததால் குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். இதற்காக விதவிதமான கவர்ச்சி உடையில் போடோஷூட் நடத்திய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காகவே தன்னை புகைப்படம் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் பா.ஜனதாவில் இணைந்து அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

1 More update

Next Story