இணையத்தை ஆக்கிரமிக்கும் 'நம்ம சத்தம்' பாடல்
இந்த பாடல், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'பத்து தல' படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'நம்ம சத்தம்' என்ற பாடல் பிப்ரவரி 3-ந்தேதி (இன்று) நள்ளிரவு 12.06 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அக்கரயில நிக்கிறவன எட்டுது நம்ம சத்தம் என்ற பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
The Wait is Over #NammaSatham first single track from #Atman @SilambarasanTR_ @Gautham_Karthik starrer #PathuThala is Out Now! @SonyMusicSouthhttps://t.co/aDnDVHFr3p
— A.R.Rahman (@arrahman) February 2, 2023
✍️@Lyricist_Vivek
@iamSandy_Off
@nameis_krishna
Worldwide #StudioGreen Release