"தேசிய விருது, அழகான பிறந்தநாள் பரிசு" - சூர்யாவுக்கு நடிகர் மம்முட்டி வாழ்த்து


தேசிய விருது, அழகான பிறந்தநாள் பரிசு - சூர்யாவுக்கு நடிகர் மம்முட்டி வாழ்த்து
x

தேசிய விருது வென்றுள்ள சூர்யாவுக்கு நடிகர் மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.

நடிகர் சூர்யா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் தேசிய விருது வென்றுள்ள நடிகர் சூர்யாவுக்கு நடிகர் மம்முட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தேசிய விருது, அழகான பிறந்தநாள் பரிசு. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புள்ள சூர்யா" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story