நாட்டு நாட்டு ...! பாடலுக்கு ஆட்டம் போட்ட பாகிஸ்தான் நடிகை


நாட்டு நாட்டு ...! பாடலுக்கு ஆட்டம் போட்ட பாகிஸ்தான் நடிகை
x

கோல்டன் குளோப் விருது பெற்றதும் இந்த பாடலுக்கான மவுசு அதிகரித்துவிட்டது. இந்த பாடலுக்கான அர்த்தத்தை பலரும் இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னை

ஆர்ஆர்ஆர் படம் கடந்தாண்டு மார்ச் 25 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. உலகளவில் பாராட்டை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது. அடுத்ததாக கிரிடிக் சாய்ஸ் விருதையும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றது. மேலும் 28வது விமர்சகர்களின் சாய்ஸ் விருதுகளையும் வென்றது.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ஆங்கிலேய இளைஞருக்கு போட்டியாக நடனமாடும் காட்சி பார்ப்பவர்களையும் துள்ளல் போட வைக்கும் நடன அசைவுகளை கொண்டது. அந்த அளவுக்கு இசையமைப்பாளர் கீரவானியின் இசை வடிவமும், பிரேம் ரக்ஷித்தின் நடன அமைப்பும் இருந்தது.

கோல்டன் குளோப் விருது பெற்றதும் இந்த பாடலுக்கான மவுசு அதிகரித்துவிட்டது. இந்த பாடலுக்கான அர்த்தத்தை பலரும் இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீர் ஆர்ஆர்ஆர் படத்தின் பாடலான "நாட்டு நாட்டு" பாடலுக்கு நடனமாடி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.




Next Story