தேசியக் கொடியை ஸ்பெயினில் பறக்க விட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்!


தேசியக் கொடியை ஸ்பெயினில் பறக்க விட்ட  நயன்தாரா - விக்னேஷ் சிவன்!
x

ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள புது ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் இந்திய தேசியக் கொடியை ஸ்பெயினில் பறக்கவிட்டு சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் தேனிலவு பயணமாக தாய்லாந்துக்கு புறப்பட்டு, ஒரு வாரத்துக்கு பிறகு நாடு திரும்பினார்கள். அதன் பின்னர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு பணிகளில் நயன்தாரா பிசியானார்.

இந்நிலையில் நயன்தாரா அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஸ்பெயினுடன் 2வது தேனிலவு பயணத்தைத் மேற்கொண்டு உள்ளனர். விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் ஒவ்வொரு ஃபோட்டோக்களும் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. அந்த வகையில் நயன் - விக்கி ஜோடி ஸ்பெயினில் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ளனர்.

ஸ்பெயினில் இந்திய தேசிய கொடியை பிடித்தவாறு இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதன் மூலம் ரசிகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். ஸ்பெயினில் முக்கிய சுற்றுலா தளம் ஒன்றில் கூட்டம் நிறைந்திருக்கிறது. அங்கே நின்று கொண்டு இருவரும் நமது தேசிய கொடியை கையில் பிடித்தப்படி நிற்கின்றனர்.

அதுபோல் நயன்தாரா பார்சிலோனாவில் ஒரு வீதியில் டிரம்ஸ் கலைஞரின் இசையை ரசிக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஆட்கள் அதிகம் நடமாடும் ஒரு வீதியில் ஒரு ஐரோப்பியர் டிரம்ஸ் கருவியை இசைக்க அதை நயன்தாரா நின்று ரசிக்கிறார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள புது ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் இந்திய தேசியக் கொடியை ஸ்பெயினில் பறக்கவிட்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய க்ளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.



Related Tags :
Next Story