புதிய தொடக்கம்...கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சூர்யா


புதிய தொடக்கம்...கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சூர்யா
x

'சூர்யா 44' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கியுள்ள 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் 'புறநானூறு' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில், சூர்யா நடிக்கும் 44-வது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'சூர்யா 44' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா, புதிய தொடக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Next Story