திரிஷா நடித்துள்ள 'தி ரோட்' படத்தின் புதிய பாடல் வெளியீடு


திரிஷா நடித்துள்ள தி ரோட் படத்தின் புதிய பாடல் வெளியீடு
x

திரிஷா நடித்துள்ள 'தி ரோட்' படத்தின் 'ஓ விதி' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தென்னிந்திய பிரபலமான நடிகை திரிஷா, இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் 'தி ரோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். 'தி ரோட்' திரைப்படம் வருகிற அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'ஓ விதி' என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்த பாடலை சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story