கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படத்தின் புதிய அப்டேட்..!


கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் புதிய அப்டேட்..!
x

'ஸ்டார்' திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். 'ஸ்டார்' திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை அதிதி போஹங்கரின் கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அதிதி போஹங்கர் 'ஜிமிக்கி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story