'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட்
செப்டம்பர் 15-ம் தேதி 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
சென்னை,
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இத்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற செப்டம்பர் 15-ம் தேதி 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான காலத்துக்கும் நீ வேணும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாடலான மறக்குமா நெஞ்சம் பாடல் வரும் 14-ஆம் தேதி மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறக்குமா நெஞ்சம் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது
Here's the Glimpse of @arrahman's Musical Magic #MarakkumaNenjam from @SilambarasanTR_ - @menongautham's #VendhuThanindhathuKaadu releasing on Aug 14 at 6:21 PM! #VTKFromSep15
— Vels Film International (@VelsFilmIntl) August 12, 2022
Produced by @VelsFilmIntl @IshariKGanesh
A @RedGiantMovies_ Release @Udhaystalin @MShenbagamoort3 pic.twitter.com/fsbLgyKeNR
.